அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

லகமெல்லாம் வசிக்கும் கூத்தாநல்லூர் மக்கள் ஊரின் முக்கிய செய்திகளை அறிந்துக் கொள்ளும் பொருட்டு பல வலைகள் இருந்தாலும், புரூனேயில் வாழும் எங்களால் ஊரின் எந்த செய்திகளையும் தெரிந்துக் கொள்ள முடியாமலும், ஊரின் நல்லது, கெட்டது போன்ற விஷயங்களை அறிந்துக் கொள்ளவோ, அவற்றில் பங்கு பெறவோ முடியாமலும், எங்களால் எங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடியாமலும் இருந்த காரணங்களால் இந்த வலைப்பூவை உருவாக்கி இருக்கின்றோம்.

மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ள Chat Box மூலம் உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்களை மற்றும் உலகம் முழுவதும் உள்ள நமதூர் மக்களை மிக எளிதாக தொடர்பு கொண்டு, உங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம்.

உங்களுடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை எங்களுக்கு தெரிவித்தால் அது எங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும். எங்களை knrbrunei@gmail.com என்ற email மூலமாகவோ அல்லது +6737131440 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Image and video hosting by TinyPic

Saturday, November 28, 2009

தியாகப் பெருநாளாம் இப்புனிதத் திருநாளில் தியாகத்தை உணர்ந்தவர்களுக்கும், என் இனிய எமதூரார்களுக்கும், உலகலாவிய இஸ்லாமிய நண்பர்களுக்கும் கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் சார்பாக இதயம் நிறைந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இப்புனித நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது பாவங்களையும் மன்னித்து, அருள்புரிந்து, நம் நியாயமான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவானாக, ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலமீன்!!!

என்றும் அன்புடன்,
ஜாஃபர்

Saturday, November 21, 2009



ன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நமதூர் நன்மைக்காக அல்அமான் இளைஞர் இயக்கம் மூலமாக செயல்பட்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதை நாம் அனைவரும் அறிவோம். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், நமதூரின் கொடையாளர்கள் மூலமாகவும் தற்போது புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை அல்அமான் இளைஞர் இயக்கத்தார்கள் வாங்கி சிறிதுகாலம் தொய்வடைந்த இச்சேவையை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். நமதூருக்கு ஆம்புலன்ஸ் மிக முக்கியமான ஒரு தேவை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இச்சேவை சிறப்புடன் செயல்பட நம்மாலான உதவியை அவர்களுக்கு வழங்க கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தார்கள் முடிவு செய்து இருப்பதால், உங்களால் ஆன உதவியை சிறு அல்லது பெருந்தொகை மூலமாக கொடுத்துதவி இந்த தன்னலமற்ற சேவையில் நாமும் பங்கு பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
.

Sunday, October 18, 2009

18/10/2009
41, மேலத் தெரு

கணக்கப்பிள்ளை முகம்மது யூசுப் மகளும், கொட்டப்பக்கி முகம்மது அப்துல்லாஹ் மனைவியும், கணக்கப்பிள்ளை கமால்தீன், ஜியாவுதீன் சகோதரியும், பஷீர் அகமது, நஸீர் அகமது, ஜுபைர் அகமது தாயாரும், அல்லிராய் ஜெகபர்தீன் மாமியாருமான நபீஸா பீவி (வயது 75) மெளத்து. நாளை காலை 10.30 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
18/10/2009
71, மேலத் தெரு

பொதக்குடியார் அப்துல் ஹமீது மருமகனும், முகம்மது யாகூப், முகம்மது அமீன், முகம்மது தமீம் மச்சானும், அடி சுல்தான் சம்பந்தரும், கட்டிமேடு முகம்மது இப்றாஹீம், முகம்மது ஆரிப் தகப்பனாருமான முகம்மது அமீன் (வயது 50) மெளத்து. இன்று மாலை 4.30 மணிக்கு மேலப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Sunday, October 11, 2009

11/10/2009
I.P. கோயில் தெரு, திருவாரூர்.

சேமுலெப்பை முகம்மது அபூபக்கர் மகளும், கூத்தூர் O.M. ஷேக் தாவூது மனைவியும், நூர்தீன் N.M. ஹாஜா மைதீன் சிறிய தாயாரும், சேமுலெப்பை அப்துல் ரஹ்மான் சகோதரியுமான சேமுலெப்பை உம்மல் ஃபஜ்ரியா (வயது 85) மெளத்து. இன்று மாலை 4.00 மணிக்கு விஜயபுரம் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.
11/10/2009
37 A/1, ஜின்னா தெரு

ஹாஃபிஸா ஹாஜி ஹபீபுல்லாஹ் பாய் மனைவியும், ஆதங்கனி S.A. அப்துல் கரீம் சம்பந்தியும், சித்திக் மைதீன், பாதுஷா மைதீன் தாயாரும், பக்ருதீன் அகமது, ஷபாஅத் அகமது அத்தம்மாவும், கோவிந்தக்குடி அப்துல் கரீம் மாமியாருமான மரியம்பீவி (வயது 80) மெளத்து. நாளை காலை (12/10/2009) அன்று 10.00 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Saturday, October 10, 2009

10/10/2009
66, கீழத்தெரு, மரக்கடை

தொ.ப. முகம்மது அப்துல்லாஹ் மகனும், தொ.ப. அப்துல் அஜீஸ் சகோதரரும், தொ.ப. முகம்மது சாதிக் தகப்பனாரும், A.S. ஃபஜ்லுர் ரஹ்மான் மச்சானும், தொ.ப. முகம்மது கபீர் மாமனாரும், புளியமரத்தார் முகம்மது அலி சம்பந்தருமான தொ.ப. முகம்மது அலி (வயது 67) மெளத்து. இன்று மாலை 5.00 மணிக்கு மரக்கடை பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.